கிளிநொச்சி சிவன்கோவிலில் மனித எலும்புக்கூடு - அச்சத்தில் மக்கள்

Report Print Arivakam in வாழ்க்கை
599Shares

கிளிநொச்சி - உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்தாக சந்தேகிக்கப்படும் நிலையில், மண்டையோடும் எலும்புக்கூடும் மாத்திரமே எஞ்சியுள்ளது.

இந்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையதாக இருக்காலம் என கிளிநொச்சி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் இந்த எலும்புக்கூடுகள் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதோடு, என்ன நடந்திருக்கும் என்பது பற்றி மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments