தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் மனதை மாற்றி அசத்திய கூகுள்....!

Report Print Vino in வாழ்க்கை
283Shares

காதலில் வெறுப்படைந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் ஒருவரை கூகுள் காப்பாற்றியுள்ளது. கடந்த சில தினத்துக்கு முன்னர் யுவதியின் தற்கொலைக்கு உதவிய கூகுள், இன்று இன்னொரு பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணின் காதலர் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாக காதலியை கைவிட முடிவு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்ய முடிவு செய்து கூகுளில் வழி தேடியுள்ளார்.

இதில் என்ன சுவாரஷ்யம் எனில் இதுபோன்ற தேடலுக்கு கூகுள் வழிகாட்டுவதற்கு பதிலாக தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தொலைபேசி எண்களையே காட்டியுள்ளது. இதை அறியாத அந்த பெண் அதில் கிடைத்த ஒரு எண்ணை தேர்வு செய்து அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

அவரது தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பரிவுடன் பேசி தனது அலுவலகத்திற்கு அழைத்து அந்த பெண்ணிற்கு ஆலோசனைகள் கூறியதோடு மகளிர் காவல் நிலைய பெண் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து மேலும் கவுன்சிலிங் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த பெண் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவருடைய காதலரை அழைத்து அவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments