தனது இசையால் மன்னிப்பு கோர வைத்த ஈழத்து சிறுமி

Report Print Vino in வாழ்க்கை
783Shares

இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் டிசாதானா, இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கையில் இருந்து யுத்த வடுக்களையே சுமந்து சென்ற இந்த சிறுமி சாதிக்க முடியாதா...? என்ற ஏக்கத்துடன் இசையின் மூலம் தனது கால்தடத்தினை பதிக்கின்றார்.

அந்த வகையில் முதலில் காத்திருப்பு பட்டியல் (வெய்ட்டிங் லிஸ்டில்) வைத்திருந்த நடுவர்கள் இரண்டாவது முறை இவரது பாடலினை கேட்டதுடன் அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

தனது இசை பயணத்திற்க்காக தினமும் 20 கிலோமீற்றர் சென்று கற்கும் சிந்த சிறுமி, இந்த பாடல் நிகழ்ச்சி போட்டியில் அடுத்தடுத்த சுற்றுக்களில் ரசிகர்களையும் நடுவர்களையும் தனது இசையால் கட்டிப்போட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அந்த காணொளியினை பார்க்க

Comments