குளியாபிட்டிய - தும்மலசூரிய பிரதேசத்தில், குடும்பப்பிரச்சினைக்கு பரிகாரம் தேடி தேவலாயம் ஒன்றில் பூஜைக்கு சென்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான திருமணமாகிய இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தொடர்பில் சாந்தி பூஜை ஒன்றினை முன்னெடுக்க வந்துள்ளார்.
இதன்போது பூஜையை மேற்கொண்ட நபர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்கு ஒரு திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.
குறித்த திரவத்தை அருந்திய பெண் உடல் சுகயீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.