தமிழ் மீது வெளிநாட்டு பெண்ணின் பற்று...! ஜல்லிக்கட்டின் நிலை..!

Report Print Vino in வாழ்க்கை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு வலியுறுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தி நேற்று இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் யாழ். நல்லூரில் பல கோரிக்கையினை தமிழக அரசிற்கு முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் " ஜல்லிக்கட்டிற்கு தாமும் முழு ஆதரவினை தமிழ் மக்களுக்கு தருவதாக" பாதையினை பெற்று தானும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் தமிழ் மீதான பற்று அங்கிருந்த அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய அரசை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்துவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இன்று பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என மெரினா போராட்டக்குழு அறிவித்திருந்தது. அவசர சட்டம் இயற்றாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் போராட்டக்குழுவினர் எச்சரித்திருந்தனர்.

போராட்டகுழுவினர் விதித்த காலம் முடிந்துள்ள நிலையில், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு அலுவலகங்ளை முற்றுகையிட போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் தொடர்ந்து தங்கள் பிரச்னையை பதிவு செய்து வரும் இந்த இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

இணையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து இந்தியா உள்ளிட்ட யூ.ஏ.இ, கட்டார் , சிங்கப்பூர், ஓமன், இலங்கை, பஹ்ரைன், குவைத், மலேசியா, சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற 19 நாடுகளில் பெரிய ஆதரவு இணையத்தின் வழியாக கிடைத்துள்ளது.

Comments