வவுனியா - பாரதிபுரம் ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் விளையாட்டு விபரீதமாகியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை 5.30மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மரத்தில் கயிற்றினைப் போட்டு அதை கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் கயிறு கழுத்தில் இறுகியுள்ளது.
உடனடியாக இரு சகோதரர்களும் அயலவர்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சகோதரர்கள் இருவரின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக வேலைசெய்து வரும் நிலையில் தந்தை வேலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டில் இருவரும் தனியாக வசித்துவந்துள்ளதுடன், குறித்த சிறுவர்களின் கூக்குரலினையடுத்து அயலில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை, இச்சிறுவர்கள் 12 மற்றும் 13 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.