இளம் தாயொருவரின் விபரீத முடிவு

Report Print Vethu Vethu in வாழ்க்கை

கடன் சுமை தாங்க முடியாத இளம் தாயொருவரின் விபரீத முடிவு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம் தாயொருவர், தனது பிள்ளைக்கும் விசம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

நேற்று காலை தனது 2 வயதுடைய குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.

விஷம் அருந்தி ஆபத்தான நிலைமையில் தாய் மற்றும் குழந்தை ஹொரன ஆரம்ப வைத்தியசாலையில் பிரதேச மக்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக் கொண்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

35 ஆயிரம் ரூபாவை கடனாக பெற்ற நிலையில், வாரத்திற்கு 1000 ரூபாய் என்ற கணக்கில் செலுத்தியுள்ளார்.

கடந்த 3 வாரங்கள் அவரால் கடன் நிலுவையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது அவரது கணவர் வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் கூலித் தொழிலுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.