தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டதாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை! இராணுவ அதிகாரி

Report Print Kamel Kamel in விடுதலைப்புலிகள்

இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி முறைப்பாடு எதனiயும் செய்யவில்லை என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழினி தனது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டதாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட காலத்திலேயே தமக்கு புற்று நோய் ஏற்பட்டதனை தமிழினி அறிந்து கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போது விச ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைப் பேரவையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் விச ஊசி பற்றி எதுவும் கூறப்படவில்லை,

செப்டம்பர் மாதம் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் விச ஊசி பற்றி பிரச்சாரம் செய்யப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments