மலேசிய பாம் தோட்டங்களில் வேலை செய்யும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்!

Report Print Kamel Kamel in விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் அந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை குருடர்களைப் போன்று பாராதிருந்தனர் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மலேசிய பாம் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். எனினும் இது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் தமிழர்கள் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தரும் போதும் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்யப்படுவதில்லை.

கடந்த காலங்களில் முன்னாள் மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் நடவடிக்கைகளினால் சில முக்கிய புலித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என குறித்த மலேசிய வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.


You may like this video

Latest Offers

loading...

Comments