கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்

Report Print Reeron Reeron in விடுதலைப்புலிகள்

கிழக்கு பல்கலையில் கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறையும் உணர்வு பூர்வமாக பல்கலையின் தமிழ் மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைகழக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலில் பல்கலையின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில் கிழக்கு பல்கலையின் மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைகலையில் கற்கும் அனைத்து பிரிவுகளிலும் இருந்து மாணவர்கள் வருகைதந்ததுடன் மிகவும் அமைதியான முறையில் ஈகைச் சுடர் நிகழ்வை நடாத்தினர்.

இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்குரிய ஈகைச் சுடர் நினைவேந்தல் அனுஸ்டிப்புக்கு வடகிழக்கு மற்றும் மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ச்சியாக நடாத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments