தமிழ் சிங்கள மக்களுக்கு சம உரிமையினை வழங்குவது தொடர்பான 13 ஆம் திருத்த சட்டத்திற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதியும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் சிங்கள தமிழ் மக்களிடையில் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. தற்போது அரசியல் பிரச்சினைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
மேலும் குறிப்பிட்ட சில சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் ஏற்ற வகையில் நாட்டில் எல்லா மக்களுக்கும் சம உரிமையை பெற்று கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பு தொடர்பான சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் வாக்கெடுப்பு போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றது.
13 திருத்த சட்டத்திற்கு அமைவாக வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு சமமான அதிகாரம் வழங்குவது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் அது பெரும்பான்மையான சிங்கள அரசாங்கத்தினால் இவர்களுக்கான முழு அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறே 1987 ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படியில் (தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமையை வழங்குவது, ஆனால் ) விடுதலைப்புலிகள் அமைப்பினை ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சமாதானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.