விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு: மலேசிய தமிழ் அரசியல்வாதி விடுதலை

Report Print Ajith Ajith in மலேசியா

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மலேசிய தமிழ் அரசியல்வாதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆசோசனைக்கு அமைய அவருக்கு எதிரான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மலேசிய மேல் நீதிமன்ற நீதிபதி, மொஹமட் ஜாமி ஹூசைன் பி குணசேகரன் என்ற குறித்த அரசியல்வாதியை விடுதலை செய்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுடன் இணைந்த மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக குணசேகரன் வேறொரு நீதிமன்றதில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அந்த குற்றச்சாட்டையும் சட்டமா அதிபர் விலக்கிக் கொண்டதன் காரணமாகவே அதிலிருந்தும் குணசேகரன் விடுதலை செய்யப்படவுள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்ட மேலும் 11 பேர் இந்த வாரத்திற்குள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.