தந்தையை கொல்ல முயன்ற பெண் டாக்டர்:

Report Print Thayalan Thayalan in மருத்துவம்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 83). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், தனது மகனின் ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது மகள் டாக்டர் ஜெயசுதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆஸ்பத்திரியில் புகுந்து தனது தந்தையை கொல்ல முயன்றதாக புகார் எழுந்தது. ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சைக்காக பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளையும், ஜெயசுதா பிடுங்கி விட்டதாக தெரிகிறது.

சொத்து பிரச்சினையில் ஜெயசுதா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்திருந்த தனது தந்தையின் கைரேகையையும், ஜெயசுதா, வெற்று பத்திரத்தில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்கும் விதத்தில், ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவிலும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் டாக்டர் ஜெயசுதா மற்றும் அவரது மகன் மீது கொலை முயற்சி வழக்கு போட்டனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments