ஜெயலலிதா இருந்த அறையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

Report Print Samy in மருத்துவம்

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து பரபரப்பானது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை.

2வது தளத்தில் உள்ள MDCCU-வில் உள்ள ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜெயலலிதா. கடந்த 5-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி மறைந்தார் ஜெயலலிதா.

இவர் சிகிச்சை பெற்று வந்த அறையின் ஒருநாள் வாடகை தற்போது தெரியவந்துள்ளது.

அப்போலோவில் முதல் தளத்தில் MDCCU extn வார்ட் இருக்கிறது. இந்த வார்டில் ஆபத்தான கட்டத்தை தாண்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2வது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த அறையின் ஒருநாள் வாடகை 25 ஆயிரம் ரூபாய். அதோடு, ஒரு சிறப்பு சிகிச்சை மருத்துவர், நோயாளி ஒருவரை ஒரு முறை பரிசோதித்தால் அதற்கு கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.

இப்படி ஒரு நோயாளியை நாள் ஒன்று எத்தனை முறை மருத்துவர் பரிசோதிக்கிறாரோ, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது தவிர வெளிநாட்டு, வெளிமாநில மருத்துவர்களின் வருகைக்கு தனிக் கட்டணம்.அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்கான அறை வாடகை மட்டும் 18,75,000 ரூபாய். மருத்துவர்கள் பரிசோதனைக் கட்டணம், மருந்து செலவு ஆகியவற்றை சேர்த்து தோராயமாக கணக்குப் பார்த்தாலும் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது மருத்துவமனை வட்டாரம்!

- Vikatan

Comments