கண்டி பொது மருத்துவமனையில் பரவியுள்ள எச்.வன்.என்.வன் வைரஸ் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு இன்று கண்டி வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் சிலர் உயிரிழந்தமை மற்றும் மருத்துவமனையில் குறித்த வைரஸ் பரவியுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நபருக்கு சளியுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கே இந்த நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் கண்டி வைத்தியசாலையின் நோயாளர் வாட்டு மூடப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.