இலங்கையில் புற்றுநோய் பரவ காரணம் என்ன என்பதைக் கண்டறிய சுவீடனைச் சேர்ந்த அமைப்பு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மகரம புற்று நோய் வைத்தியசாலையுடன் இணைந்து இந்த ஆய்வுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதோடு இரத்தப் புற்றுநோய் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
பேராசிரியர் ஜோன் மீவெல்ல தலைமையிலான இந்த குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவுடன் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு சுகாதார அமைச்சு வழங்கிவரும் சிகிச்சைகள் மற்றும் நிவாரண சேவைகள் குறித்தும் சுகாதார அமைச்சர் ஆய்வுக்குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.