வைத்தியர்கள் தொழிற்சங்கப் போராட்டம்! நிறுத்தப்பட்டுள்ள சத்திர சிகிச்சைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா?

Report Print Kamel Kamel in மருத்துவம்

வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் 60,000 சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தினால் திட்டமிடப்பட்ட 60,000 சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வந்த சுமார் இரண்டு லட்சம் பேர் வெறும் கையுடன் திருப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் தீவிர சிகிக்சைப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு பாதிப்பு ஏற்படா வகையில் போராட்டம் நடத்தப்பட்டது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கத் தவறினால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments