போதைப் பொருள் பாவனையாளர்களும் எயிட்ஸ் தொற்றுக்குப் பாதிப்பு

Report Print Aasim in மருத்துவம்
47Shares

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டவர்களில் போதைப்பொருள் பாவனையாளர்களும் பெருமளவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை எயிட்ஸ்நோய் மற்றும் பால்வினை நோய்த் தடுப்பு மையம் இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

ஊசி மூலம் போதைப் பொருளை உடலில் ஏற்றிக் கொள்ளும் போதைப் பொருள் பாவனையாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே ஊசியைப் பயன்படுத்தி பலர் போதை மருந்தை ஏற்றிக் கொள்ளும் போது எயிட்ஸ் நோய் இலகுவாகத் தொற்றும் வாய்ப்பு இருப்பதாக எயிட்ஸ் தடுப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடமும் இரண்டுபோ் அவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எயிட்ஸ் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.