ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை

Report Print Shalini in மருத்துவம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறுநீரக கோளாறு காரணமாக ஸ்ரீ ஜனவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளலாம் என ஸ்ரீ ஜனவர்தனபுர வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளர் பிபாத் வேரத்த தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இவருக்கு இன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.