யாழில் முதன்முறையாக பொருத்தப்பட்டுள்ள பல இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம்

Report Print Sumi in மருத்துவம்

நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து யாழ். பண்ணையிலுள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது.

ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய அதிகாரி யமுனாநந்தா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் 160 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த இயந்திரம் யாழ். காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோயாளர்கள் இலவசமாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர் பரிசோதிக்கப்படும் போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வியந்திரம் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.