எதிர்காலத்தில் மேலும் 27 மருந்துகளின் விலைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, விலை ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் 5000 க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி பொருட்களின் விலை குறையும் என்று அவர் கூறுயுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மருந்துப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் 18 வது மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.