டுபாய் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! கதிகலங்கும் இலங்கையர்கள்

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

டுபாயில் தப்பிச் சென்ற ஏனைய இலங்கையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் ஏற்பாடு செய்த பிறந்த நாளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகந்துரே மதுஷ் ஏற்பாடு செய்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் ஆகியோரை சிசிடீவி காணொளியை அடிப்படையாக வைத்து கைது செய்வதற்கு பாரிய நடவடிக்கை ஒன்றை டுபாய் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விருந்து இடம்பெற்ற ஹோட்டலின் சிசிடீவி கமரா காட்சிகள் அனைத்தையும் டுபாய் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு மற்றையவர்கள் தொடர்பில் தகவல் பெற டுபாய் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விருந்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தப்பி சென்ற வாகனம் பயணித்த இடத்தை கண்டுபிடிப்பதற்காக டுபாய் நகரில் பொருத்தப்பட்டுள்ள 36 விசேட கமராக்களின் காட்சிகளை தங்கள் பொறுப்பில் எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாகந்துரே மதுஷ் உட்பட 31 சந்தேக நபர்கள் இதுவரையில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு டுபாய் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers