வெளிநாடு ஒன்றில் சித்திரவதைகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள்! கலக்கத்தில் உறவினர்கள்

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

குவைத் நாட்டுக்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான 28 28 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை UL 230 ரக விமானம் மூலம் குறித்த இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பணிப் பெண்களாக சென்ற நிலையில் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.

நாடு திரும்பிய பெண்களின் கைகள், கால்கள் மற்றும் தலையில் பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காயங்கள் உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோருக்கு உணவு மற்றும் சம்பளம் கிடைக்காத நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீடு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.