வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையின் முக்கிய புள்ளிகளை நாடு கடத்த நடவடிக்கை

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையில் தேடப்படும் முக்கிய புள்ளிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர் நாடு கடத்தப்படவுள்ளனர்.

மதுஷ், அமல் பெரேரா உட்பட இலங்கையர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்கு டுபாய் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த மாதம் 5ஆம் திகதி மதுஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இதுவரை ஆறு பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களையும் நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு கடத்தப்படவுள்ளவர்கள் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவார். இவர்களில் கொலைக் குற்றவாளிகளும் அடங்கும்.