அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்! 180 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் நாட்டிலிருந்து 180 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று சற்று முன்னர் விபத்துக்குள்ளாகி உள்ளது.

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானம் தெஹ்ரானுக்கு அருகில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Boeing 737 ரக குறிப்பிட்ட விமானத்தில் 180 பேரில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான படைத்தளம் மீது ஈரான் தாக்குல் நடத்திய நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீவிரமடைந்துள்ள அமெரிக்க - ஈரான் நாடுகளின் மோதல்களின் பிரதிபலிப்பாக இந்த விமான விபத்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...