வெளிநாடு ஒன்றில் மூன்று இலங்கையருக்கு எதிராக அபராதம் விதித்த நீதிமன்றம்

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

டுபாயில் மத நிந்தனையில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த மூன்று பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் மூன்று இலங்கையருக்கும் 5 இலட்சம் டினார் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் டுபாயில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் பாதுகாப்பு சேவையில் பணியாற்றியுள்ளனர்.

அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டிராகிராம் ஊடாக கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 28 மற்றும் 34 வயதிற்குட்பட 3 இலங்கையர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது தவறினை ஏற்றுக்கொண்ட நிலையில் அபராதம் விதிக்கபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers

loading...