வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண் உட்பட நால்வர் பலி

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

கட்டார் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பணி பெண் ஒருவரும் பிலிப்பைன்ஸ் பெண்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டார் நாட்டில் Al Khor பகுதியில் உள்ள வீட்டில் ஒரே அறையில் வசித்து வந்த பணிப்பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்கள் சில காலங்களாக அங்கு பணி செய்து வந்துள்ளனர். குறித்த பணிகள் பெண்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரும் வீட்டவர்களும் தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தீவிபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.