வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் செய்த மோசமான செயல்

Report Print Vethu Vethu in பணம்

காலியில் போலியான டொலர்களை வழங்கி காணி துண்டொன்றை கொள்வனவு செய்ய முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரூமஸ்ஸல பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்ய முயற்சித்த வெளிநாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

71 ஏக்கர் காணியை 50 கோடி ரூபாய் பணத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டவர் முயற்சித்துள்ளார்.

எனினும் போலியான நாணயங்களை வழங்கிய நிலையில், குறித்த வெளிநாட்டவர், சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நாட்டவர் போன்று நடித்த நைஜீரிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஹங்கம ஹோட்டல் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான இந்த காணி விற்பனைக்கு உள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த விளம்பரத்திற்கமைய சந்தேக நபர் சூடான் நாட்டு வர்த்தகருடன் சென்று ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.