வங்கியில் வைப்பிலிடப்பட்ட 20லட்சம் ரூபா மாயம்!

Report Print Theesan in பணம்

வவுனியாவில்; வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20லட்சம் ரூபா பணத்தை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வங்கியொன்றில் கடந்த 05.06.2017 அன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு சி. ஜெகராசா என்பவர் (2200250)இருபத்திரெண்டு லட்சத்தி இருநூற்றி ஜம்பது ரூபாவினை வைப்பிலிட்டு புதியகணக்கு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து தனது வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும்முகவர் ஒருவரிடம் தனது வங்கி புத்தகம், கடவுச்சீட்டு என்பனவற்றை பயண ஒழுங்குகள்மேற்கொள்வதற்காக ஒப்படைத்துள்ளார்.

முகவரிடமிருந்து கடந்த சில தினங்களாகதொலைபேசி அழைப்பு எதுவும் எற்படுத்த முடியவில்லை. இதையடுத்து சந்தேகம் ஏற்பட்டுநேற்று (05) வங்கிக் கணக்கை சரிபார்த்த போது வங்கியின் கணக்கில் 20 லட்சம்ரூபாவை நாரமல பகுதியிலுள்ள குறித்த வங்கி கிளையிலிருந்து கடந்த 29ம் திகதி பணம்மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது வாடிக்கையாளருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து வவுனியா வங்கி முகாமையாளருடன் ஏனைய விபரங்கள் ஆலோசனைகள்பெறப்பட்டதையடுத்து இன்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிடப்பட்ட பணம் வேறு ஒருவரினால் எவ்வாறுபெற்றுக்கொள்ள முடியும் வங்கி புத்தகத்தினை வைத்தே பணம் பெற்றுள்ளதாகதெரிவித்துள்ளனர்.

குறித்த முகவராலேயே பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றசந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers