வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ரூபாய்!

Report Print Vethu Vethu in பணம்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் நூற்றுக்கு 2.6 வீதம் வீழ்ச்சியை ரூபாய் பதிவு செய்துள்ளது.

எனினும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட முன்னைய அறிக்கையின்படி, 2017ம் ஜுன் மாதம் 5ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நூற்றுக்கு 1.8 வீதம் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

அதற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி ஜுன் மாதத்தினுள் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் திகதி வரையிலான காலப்பகுதியில் யூரோவுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 9.4 வீதத்திலும்,

ஸ்ட்ரேலிங் பவுண்ட் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 7.8 வீதத்திலும்,

ஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 5.4 வீதத்திலும்,

கனேடிய டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 6.2 வீதத்திலும்,

அவுஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 7.1 வீதத்திலும்,

இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 7.4 வீதத்திலும், இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.