18 லட்சமாக மாறிய 18 ரூபாய்! வங்கியில் ஏற்பட்ட மோதல்

Report Print Vethu Vethu in பணம்

தனது கணக்கில் 18 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாக கூறி நபர் ஒருவர் வங்கி ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

தலாதுஓய பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையொன்றில் இந்த நபர் பணம் எடுக்க வேண்டும் என கூறி மோதலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் 4 மணியளவில் வங்கி மூடியிருக்கும் போது இந்த நபர் அந்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகளை கடுமையாக திட்டியுள்ளார்.

இந்த நிலையில் தலாதுஓய பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த நபரின் கணக்கில் வெறும் 18 ரூபாய் மாத்திரமே காணப்பட்டுள்ளது. இவர் எதாவது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.