கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பாரியளவு அமெரிக்க டொலர்

Report Print Vethu Vethu in பணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகுதி அமெரிக்க டொலர்கள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து பார்சல் முறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டொலர் தொகை ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த பார்சலில் பத்திரிகைகளில் சுற்றப்பட்ட நிலையில் 12,500 அமெரிக்க டொலர் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட அமெரிக்க டொலர்களின் இலங்கை பொறுமதி 20 லட்சம் ரூபாய் என சுங்க பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், கொழும்பு - 12 பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரின் பெயருக்கு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.