யூரோவுக்கு எதிராக பவுண்டின் பெறுமதி அதிகரிப்பு!

Report Print Vethu Vethu in பணம்

யூரோவுக்கு எதிராக பவுண்டின பெறுமதி உயர்வை இன்று பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரிதானியாவின் சமீபத்திய தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பானது, 2017 ஆம் ஆண்டு பொருளாதார உற்பத்திக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதற்கமையவே பிரித்தானிய பவுண்டின் பெறுமதி உயர்வை சந்தித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

யூரோவிற்கு எதிராக ஸ்ரேலிங் பவுண்ட் 1.105 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

எனினும் தொழில்துறை உற்பத்தியின் அண்மைய தரவுகளின்படி அமெரிக்க டொலருக்கு எதிராக பவுண்ட் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் ஜுன் மாதத்தின் மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியினால் 4.1 சதவீதம் உயர்வு பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன.

கடந்தாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.