திடீரென வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Vethu Vethu in பணம்

வார இறுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் கிடைத்த அந்நிய செலாவணி மற்றும் வங்கிகளில் விற்பனை செய்யப்பட்ட டொலர்கள் காரணமாக ரூபாய் வலுவடைந்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று வரையில் டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபாய் வரையில் காணப்பட்டுள்ளது. எனினும் இன்றைய தினம் டொலர் ஒன்றின் பெறுமதி 153.22 - 28 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.