திடீர் வேலை நிறுத்தத்தால் 12 மில்லியன் ரூபா நஷ்டம்

Report Print Steephen Steephen in பணம்

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளின் பயணச்சீட்டு விற்பனை மற்றும் ஆசன ஒதுக்கீடு மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம், கிடைக்காமல் போயுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் முதல் ரயில்வே ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள் மற்றும் சாரதிகள் ஆரம்பித்த திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக 350க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

இதன் காரணமாக ரயிலில் பயணிக்க ஆசனங்களை ஒதுக்கியவர்கள் மற்றும் பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.