வடக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு

Report Print Theesan in பணம்

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் நகைக் கடை வைத்து தொழில் புரிந்து வந்த ஒருவர் அண்மைக் காலமாக பலரிடம் பல இலட்சங்களை பெற்றதுடன் வங்கிகளிலும் கடன்களை பெற்றுக்கொண்டு, குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் வவுனியா வர்த்தகர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்.

வவுனியா வர்த்தகர்கள் சிலரும் குறித்த நபருக்கு பல இலட்சங்களை கொடுத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்திலும் குறித்த நபருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டை வைத்து முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.