பணிப்புறக்கணிப்பால் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டம்

Report Print Ajith Ajith in பணம்

ரயில்வே பணியாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, ரயில்வே திணைக்களத்துக்கு 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் வணிகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வழமையாக நாளொன்றுக்கு 350 ரயில் பயண சேவைகள் இடம்பெறுகின்றன.

எனினும், பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளொன்றுக்கு 20 முதல் 25 வரையான ரயில் பயண சேவைகளே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளர்களின் சேவை புறக்கணிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers