டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்திக்கவுள்ள இலங்கை ரூபாய்!

Report Print Vethu Vethu in பணம்

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் இலங்கை நாணயமான ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்யவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு நிலையை பதிவு செய்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 154.25 ரூபாயாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 153.70 ரூபாயாக பதிவாகியிருந்தது.

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை குறைவடைந்தமை மற்றும் ஏற்றுமதியாளர்களின் டொலர் விற்பனை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வருடத்தில் பெருந்தொகை பணத்தை கடனாக அரசாங்கம் செலுத்தவுள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி மேலும் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வருடம் 2.5 வீதம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.