மீண்டும் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாய்

Report Print Vethu Vethu in பணம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான டொலர் தேவை அதிகரித்துள்ளமையினால் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 154.15 - 20 ரூபாயாக காணப்பட்டுள்ளது. எனினும் நேற்று வரையில் 154.30 - 35 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு நான்கு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers