இந்தியாவிலுள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்

Report Print Shalini in பணம்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பும் தொகை அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு 5.6 பில்லியன் அமெரிக்க டொலரை அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 524 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இதனால் இந்தியாவிலுள்ள இலங்கை பணியாளார்களினால் இலங்கைக்கான வருமானம் அதிகரித்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.