டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்

Report Print Vethu Vethu in பணம்

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இலங்கை நிதி மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி நேற்று நாணய மாற்று விகிதத்திற்கு அமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 156.74 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதனை இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவு அதிகமாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகன்றது.

அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 152 ரூபாய் 97 சதமாக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையில் இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.