டொலருக்கு எதிராக தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீழ்ச்சியை தடுப்பதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொருளியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் ரூபாவின் ஸ்திரத்தன்மையை பேணுவது மிகவும் கடினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிசேஷ்ட வல்லுனர் பேராசிரியர் ஜனத் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொள்ளும் போது ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாய் மேலும் வீழ்ச்சியடையும் அபாய நிலை உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 157.68 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.