வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

Report Print Vethu Vethu in பணம்

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 1.7 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலான காலப்பதியில் இலங்கை ரூபாய் ஜப்பான் யென்னுக்கு எதிராகவே அதிக வீழ்ச்சியடைந்துள்ளது. அது 7.1 வீதமாகுமாக பதிவாகி உள்ளது.

இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்டுடன் ஒப்படும் போது 6.2 வீதத்திலும், யூரோவுடன் ஒப்பிடும் போது 4.4 வீதமும் இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் இலங்கை மத்திய வங்கி 403.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு அதன் அளவு 1,665 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers