பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலருடன் ஒப்பிடும் இலங்கை ரூபாயின் பெறுமதி 159.55 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாவின் விற்பனை பெறுமதி இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வங்கி குறிப்பிட்டுள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி டொலருடன் ஒப்பிடும் இலங்கை ரூபாயின் பெறுமதி 159.29 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 3.2 வீதம் இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.