வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

வரலாற்றில் மிக மோசமான வகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் விற்பனை விலை 161.54 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறக்குமதியாளர்களினால் பாரிய அளவு டொலர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையினால் ரூபாயின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் வளர்ச்சியடைந்துள்ள சந்தைகளின் பரிவர்த்தனை மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உலகளாவிய சந்தைகளின் நடவடிக்கை, இலங்கை ரூபாய் பெறுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.