மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 162.40 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகித கொள்கைக்கு அமைய அந்நியச் செலாவணி கோரிக்கைக்கு ஏற்ப ரூபாவின் வெளி மதிப்பு நெகிழ்வாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நாணய பரிமாற்றத்தின் தேவை உயர்வடையும் போது, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனை தடுக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.