இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும் பாரிய வீழ்ச்சி!

Report Print Nivetha in பணம்

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி இன்றைய நாணயமாற்று விகிதத்தின் படி 163 ரூபாவை தாண்டி 163.36 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 160 ரூபாய் 16 சதங்களாகவும், விற்பனை விலை 163 ரூபாய் 36 சதங்களாகவும் காணப்படுகின்றது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 160 ரூபாயாகவும், விற்பனை விலை 163 ரூபாய்க்கும் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த அளவு விற்பனை விலை அதிகரித்தமை இதுவே முதல் முறையாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - ஸ்டீபன்

Latest Offers