வங்கிகளில் நிலையான வைப்பு செய்துள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைத்த ஏமாற்றம்!

Report Print Ajith Ajith in பணம்

சிரேஸ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்களுக்கான மீளக்கொடுப்பனவுகள் வணிக வங்கிகளினால் கடந்த இரண்டு வருடங்களாக செலுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13ஆயிரத்து 462 பில்லியன் ரூபாய் அளவிலான கொடுப்பனவுகளே செலுத்தப்படவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட பரிந்துரையின்படி சிரேஸ்ட பிரஜைகளின் 1 மில்லியன் ரூபா வைப்புக்களுக்கு 15 வீத வட்டியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையான வைப்புத்தொகை பின்னர் 2017ஆம் ஆண்டு 1.5 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதன்படி, 2006ஆம் ஆண்டு வரை 22.92 பில்லியன் ரூபாய்கள் வணிக வங்கிகளில் நிலையான வைப்புக்களான இருந்தன.

எனினும், இவற்றில் 6 ஆயிரத்து 156 பில்லியன் ரூபாய்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.