இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி மிக மோசமாக இன்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இந்த தரவு வெளியாகி உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 163.84 ரூபாவாக பதிவாகிய நிலையில், கொள்வனவு விலை 160.41 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 60 சதம் வரை வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ரூபாயின் பெறுமதியில் தொடர்ந்து ஏற்படும் வீழ்ச்சியினால் இலங்கையின் கடன் 34 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மாத்திரம் 15 பில்லியன் ரூபா அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.