மிகவும் மோசமடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Murali Murali in பணம்

இலங்கை ரூபாவின் விலை, என்றும் இல்லாத அளவிலும் பார்க்க அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 164.3781 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 160.9490 ரூபா என பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த 6ம் திகதி 163.57 ரூபாவாக அதிகரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.